சென்னை மெட்ரோ டிக்கெட் எடுப்பதில் சிக்கல் - பயணிகள் தவிப்பு - CMRL அவசர அறிவிப்பு!

 
 மெட்ரோ

சென்னையில் லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்படும் மெட்ரோ ரயில் சேவையில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்காலிகமாக முடங்கியுள்ளது. இதனால் வழக்கம்போல் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ

வாட்ஸ்அப், க்யூஆர் கோடு, மெட்ரோ அதிகாரப்பூர்வ செயலி மற்றும் இணையதளம் போன்ற டிஜிட்டல் முறைகள் மூலம் பயணிகள் வீட்டிலிருந்தபடியே டிக்கெட் பெற்று வந்தனர். மொத்த பயணிகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தி வந்த நிலையில், திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தச் சேவை தற்போது வேலை செய்யவில்லை.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அடுத்த அறிவிப்பு வரும் வரை பயணிகள் அனைவரும் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்கள் அல்லது டோக்கன் கவுண்டர்கள் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை: மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

கோளாறைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதனால் பயணிகளுக்கு ஏற்படும் தற்காலிக சிரமத்திற்குச் சென்னை மெட்ரோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.