ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்!!

 
ரேஷனில் தேங்காய்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்த புகார்களும், மக்களின் எதிர்பார்ப்பும் புகார் பெட்டியின் மூலம் தெரிவிக்கலாம்.  அனைத்து கடைகளிலும் மானிய விலையில் வழங்கப்படும் எண்ணெய் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெயாக மாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  பாமாயில் உடல் உடல்நலத்திற்கு கேடு ஏற்படுத்தக்கூடியது என்பதால் அதற்குப் பதில் தேங்காய் எண்ணெய் வழங்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என  விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    

தேங்காய் எண்ணெய்

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரியை  சந்தித்துப் பேசியுள்ளனர்.  ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதற்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு முதற்கட்டமாக தமிழகத்தின் குறிப்பிட்ட  6 மாவட்டங்களில் இருக்கும் ரேஷன் கடைகளில் விரைவில் மத்திய அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும்.  

தேங்காய் எண்ணெய்

பொதுமக்கள் அளிக்கும் வரவேற்பைப் பொறுத்து இதனை தமிழகம் முழுவதும்  விரிவுபடுத்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என   மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி அறிவித்துள்ளார்.  இதனால், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை கூடிய விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் தேங்காய் எண்ணெய் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web