இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... சிதற வைக்கும் தேங்காய் விலை!

 
தேங்காய்


அன்றாட சமையலில் ருசிக்கு பொதுவாக தேங்காய் சேர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தங்கத்தை போலவே தேங்காயின் விலையும் தினமும் உயர்ந்து வருவது இல்லத்தரசிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படுவது போல் தற்போது தேங்காயின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்துக்கு தேவையான தேங்காய்கள் பெரும்பாலும்  பொள்ளாச்சியிலிருந்து தான் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த தேங்காய்கள் தான் கேரளா, சென்னை, கோவை, மதுரை என பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தேங்காய்


கடந்த சில மாதங்களாக  பூச்சி தாக்குதல் போன்றவற்றால் தேங்காய் உற்பத்தி பாதிப்பு, நேராக விவசாயிகளிடமிருந்து சந்தைக்கு வராமல், பல இடைத்தரகர்கள் செயல்படுவது, போக்குவரத்துச் செலவு  என பலவகையான காரணங்களால்  தேங்காய் விலை அதிகரித்து வருவதாக் வியாபாரிகள் கூறியுள்ளனர்.  அதன்படி  விவசாயிக்கு ஒரு கிலோ தேங்காய்க்கு ரூ.60 கிடைத்தால், அது சில்லறை விற்பனைக்கு வரும் போது ஒரு கிலோ ரூ.90 அல்லது ரூ100  ஆகிவிடுகிறது.


2024 செப்டம்பரில்  பாமாயில், சோயாமீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்க்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்ட போது, தேங்காய் விலை உயர்ந்தது.   சேலம் சந்தைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய்கள் தினமும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக சேலத்துக்கு 500 டன்னுக்கும் அதிகமாக தேங்காய்கள் விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது வட மாநிலங்களில் தேங்காய் விளைச்சல் பாதித்துள்ளதால், தமிழகத்தில் இருந்து தேங்காய் அதிக அளவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. சேலம் சந்தைகளுக்கு தேங்காய் வரத்து முன்பை காட்டிலும் பாதியாக சரிந்துள்ளது.

தேங்காய்

இதனால் தேங்காய் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சேலத்தில் கிலோ ரூ. 45 க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் விலை படிப்படியாக அதிகரித்து கடந்த மாதம் கிலோ ரூ.55 ஆக உயா்ந்தது.
தற்போதிய நிலவரப்படி கிலோ ரூ. 60 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  விலை உயா்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகள்  வட மாநிலங்களுக்கு அதிக அளவில் இங்கிருந்து தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவதால்  சேலம் சந்தைகளுக்கு தேங்காய் வரத்து குறைந்து  விலை உயா்ந்துள்ளது. இனி வரும் நாள்களிலும் இதே விலை நீடிக்கும் எனக் கூறுகின்றனர்.   

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web