கோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கையும் களவுமாக கைது!
கோவை இடையார்பாளையத்தைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் (Building Contractor) சந்தோஷ் என்பவர், தான் புதிதாகக் கட்டிய வீட்டிற்கு வரி விதிப்பதற்காக மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக அம்மண்டலத்தின் பில் கலெக்டரான பிரதீப் குமாரை அவர் அணுகியபோது, வரி விதிப்பு உத்தரவு வழங்க ரூ.40,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி, இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் பில் கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஒப்பந்ததாரர் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
