நகை , பணம் விவகாரம்... வாய்க்காலில் தள்ளி காதலியை கொலை செய்த காதலன்!

 
கோவை

 

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த கீதா (33) கொலை செய்யப்பட்ட வழக்கில் மெக்கானிக் கதிரவனை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர் சண்முகவேலுவை தேடி வருகின்றனர்.

ஆம்புலன்ஸ்

கீதாவுக்கும் மெக்கானிக் கதிரவனுக்கும் கடந்த 6 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கீதாவிடம் இருந்து நகை மற்றும் பணம் பெற்ற கதிரவன் அவற்றைத் திருப்பிக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கீதா போலீசிலும் புகார் அளித்திருந்தார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதற்கிடையே, கதிரவன் தனது நண்பர் சண்முகவேலுவுடன் சேர்ந்து கீதாவை வாய்க்காலில் தள்ளிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கதிரவனை கைது செய்த போலீசார், தலைமறைவான சண்முகவேலுவைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.