கோவை அரசு பள்ளி மாணவி மீது சாதியத் தாக்குதல் - 3 பேர் மீது புகார்!

 
மாணவி சாதிய தாக்குதல் சாதி மாணவி சாதிய தாக்குதல் சாதி

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பீடம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், அதே பள்ளியில் பயிலும் சக மாணவன் மற்றும் அவனது குடும்பத்தினரால் சாதிய ரீதியாகத் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

பீடம்பள்ளி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் சாதிய தாக்குதல் நடத்தியதாக, அதே பள்ளியில் பயிலும் ஒரு மாணவன், அவனது தாய் மற்றும் சகோதரி ஆகிய மூன்று பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், பின்னர் சாதிய ரீதியான வசவு மற்றும் தாக்குதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. மாணவியின் குடும்பத்தினர் மீதும் இக்கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) ஆகிய அமைப்பினர் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கோரியும், தாக்குதல் நடத்திய 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (SP) மனு அளிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த மாணவி தற்போது கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் காலம் தாழ்த்தக் கூடாது எனப் போராட்டக் குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.