பயணிகளின் கனிவான கவனத்திற்கு.... 2 எக்ஸ்பிரஸ் ரயில்களில் சேவையில் மாற்றம்!
ஈரோடு–கரூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாலக்காடு–திருச்சி மற்றும் கோவை–நாகர்கோவில் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடு–திருச்சி ரெயில்
பாலக்காடு டவுனில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு–திருச்சி ரெயில், கொடுமுடி மற்றும் கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள புகழூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, புகழூரில் இருந்து திருச்சி சந்திப்பு வரை இந்த ரெயில், வழக்கமான எக்ஸ்பிரஸ் ரெயிலின் அதே நிறுத்தங்களுடன் முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.
இதேபோல், வருகிற 24, 27, 29 மற்றும் 31-ந்தேதிகளில் காலை 6.30 மணிக்குப் பாலக்காடு டவுனில் இருந்து புறப்பட வேண்டிய பாலக்காடு டவுன்–திருச்சி ரெயில், கொடுமுடி ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, கொடுமுடியில் இருந்து திருச்சி சந்திப்பு வரை வழக்கமான எக்ஸ்பிரஸ் ரெயிலின் அதே நிறுத்தங்களுடன் முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.
கோவை–நாகர்கோவில் ரெயில் மாற்றுப் பாதையில் இயக்கம்
இன்று (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 24, 27, 29, 31-ந்தேதிகளில் காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட வேண்டிய கோவை–நாகர்கோவில் ரெயில், கோவை–திண்டுக்கல் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.அதன்படி, இந்த ரெயில் போத்தனூர், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரெயில் பயணிகள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
