கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை: சிறப்பு வகுப்புகள் நடத்தவும் தடை!
Oct 24, 2026, 08:05 IST
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, இன்று (அக்டோபர் 24) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களும் மாணவர்களும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் செயல்படாது. விடுமுறை நாளில் மாணவர்களை வரவழைத்துச் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி இல்லை. பள்ளி நிர்வாகங்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
