கோவை தொடர் குண்டுவெடிப்பு... 5 ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு 60 நாட்கள் பரோல் வழங்கிய தமிழக அரசு!

 
கோவை குண்டு வெடிப்பு

கடந்த 1998-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முக்கியக் குற்றவாளிகள் 5 பேருக்குத் தமிழக அரசு 60 நாட்கள் பரோல் (Parole) வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கோவையில் 58 பேரின் உயிரைப் பறித்த 1998 தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் முகமது அன்சாரி, நவாப்கான் உள்ளிட்ட 5 குற்றவாளிகளுக்கு 60 நாட்கள் பரோல் வழங்கித் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

வெடிப்பு

பரோலில் வெளியே வந்த கைதிகள், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இச்சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகித் தற்போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பழுதுபார்க்கும் கடையில் திடீர் குண்டுவெடிப்பு! மூவர் பலி!

58 பேரின் உயிரைப் பறித்த கொடூரக் குற்றவாளிகளுக்குத் தமிழக அரசு தாராளமாக 60 நாட்கள் பரோல் வழங்கியிருப்பது, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழைக்கப்படும் அநீதி என எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான கண்டனப் பதிவுகளையும் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றன.