கழிவறை ஜன்னல் வழியாக தப்பிய கைதி! விடிய விடிய தேடி மீண்டும் கைது செய்த போலீசார்

 
சூலூர்

 

கோவை மாவட்டம் சூலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி, கழிவறை ஜன்னல் வழியாகத் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறை கைது கைதி சிங்கப்பூர் வெளிநாட்டு சிறை ஜெயில்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் என்பவரை திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மருத்துவப் பரிசோதனைக்காக சூலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது கழிவறைக்குச் சென்ற கிரண், அங்கிருந்த ஜன்னல் வழியாகத் தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இந்நிலையில், இன்று அதிகாலை கருமத்தம்பட்டி அருகே பதுங்கியிருந்த கிரணை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்து மீண்டும் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.