கோவை, தேனியில் இன்று கனமழை... நாளை 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

 
மழை

 

தமிழகத்தில் கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று நவம்பர் 27-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் சாதகமான சூழல் மற்றும் பருவமழைத் தாக்கம் காரணமாக இந்த மாவட்டங்களில் மழை தீவிரமடையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை விடுமுறை

இதேபோல், நாளை நவம்பர் 28-ஆம் தேதி நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மழை சென்னை கனமழை

தொடர்ந்து இந்த மழையானது அடுத்த இரண்டு நாட்களுக்கும் நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள், தாழ்வான பகுதிகளில் இருப்போர் மற்றும் விவசாயிகள் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். நீர்நிலைகள் மற்றும் ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது