சீட்டுக்கட்டாய் சரிந்த கட்டிடங்கள்... பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்; 32 பேர் பலி, 129 பேர் படுகாயம்!

 
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் ரிக்டர் அளவில் 7.8 என்ற கணக்கில் பதிவான மிகச் சக்தி வாய்ந்த அசுர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் இதுவரை 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள சூழலில், இடிபாடுகளை மீட்கும் பணி ராணுவ உதவியுடன் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின் டோனா பகுதியில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.07 மணியளவில் இமாலய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மனியின் புவி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் அனைவரும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த அதிகாலை நேரத்தில், ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான இந்த முதல் நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நாடே அதிரத் தொடங்கியது.

இந்தோனேஷியா நிலநடுக்கம்

முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிக்கு வருவதற்குள், அடுத்த சில நிமிடங்களில் அதாவது அதிகாலை 5.18 மணியளவில் ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. அதனைத் தொடர்ந்து காலை 6.25 மணியளவில் 6.6 ரிக்டர் அளவில் மூன்றாவது நிலநடுக்கமும் உலுக்கியது. இந்த அடுத்தடுத்த 3 அசுர அதிர்வுகளால் பிலிப்பைன்ஸில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பிரம்மாண்ட வணிகக் வளாகங்கள் அனைத்தும் சீட்டுக்கட்டுகளைப் போல மளமளவெனத் தரைமட்டமாகின. நிலநடுக்கப் பகுதியில் இருந்த 37 சதவீத கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

துவக்கத்தில் 12 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், தற்பொழுது கட்டிட இடிபாடுகள் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்குப் போர்க்கால அடிப்படையில் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.