ரூ.4,500 வரை வசூல்... கண்டுக்கொள்ளாத அரசு - தொடர் விடுமுறைக்கு ஆம்னி பேருந்துகளில் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

 
தனியார் ஆம்னி பேருந்து கோயம்பேடு

காந்தி ஜெயந்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

koyambedu bus stand ஆம்னி பஸ்

விடுமுறை முடிந்து அக்டோபர் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கான கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை-சென்னை வழித்தடத்தில் ரூ.4,000 வரையிலும், நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கோவை-சென்னை வழித்தடங்களில் ரூ.4,500 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பயணிகள் கூட்டத்தைச் சமாளிப்பதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் அக்டோபர் 1 முதல் 4-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் இன்று 1,580 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து

விடுமுறை நாட்களைக் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கத் தமிழகம் முழுவதும் சிறப்பு அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறிச் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.