அட... ஒரே மாவட்டத்தில் கணவன் மனைவி இருவருமே கலெக்டர்!

 
பத்மஜா

விழுப்புரம்
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்தவர் பழனி. சமீபத்தில் கலெக்டர்கள் பணியிட மாற்றத்தின் போது பழனியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி  இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் காலியான விழுப்புரம் மாவட்ட கலெக்டர் இடத்திற்கு ஷேக் அப்துல் ரகுமான்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

ஷேக் அப்துல் ரகுமான் நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையராக பணிபுரிந்து  வந்தார். இந்நிலையில்  விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணியாற்ற உள்ளார். இதேபோல் இவரது மனைவியான பத்மஜாவும் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் பதவிகளை கணவன் மனைவியான ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் பத்மஜா அலங்கரிக்க உள்ளனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக  இருந்த ஸ்ருதஞ் ஜெய்நாராயணன்  தமிழக அரசின் மின் ஆளுமை முகமை கூடுதல் இயக்குனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டர் பதவிக்கு பத்மஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  பத்மஜா தமிழக அரசின் பொதுத்துறை துணை செயலாளராக பணிபுரிந்து  வந்தார். இந்நிலையில்  விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!