தூத்துக்குடி, திருச்செந்தூர் பக்கம் வராதீங்க... கலெக்டர் திடீர் அறிவிப்பு!

 
தூத்துக்குடி

 கனமழை எதிரொலி: இன்று, நாளை திருச்செந்தூர் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆட்சித்தலைவர்!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர் கனமழை கடந்த 2 நாட்களாக பெய்து வருகிறது. அந்த வகையில்  தூத்துக்குடி , தென்காசி,  திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில்  தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

இன்று காலை நிலவரப்படி  தூத்துக்குடி, மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 61,314 கன அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 54,474 கன அடியும், கோரம்பள்ளத்தில் இருந்து உப்பாற்று ஓடையில் சுமார் 11,900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  
அது மட்டுமின்றி  கன மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் செல்வதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி

குறிப்பாக, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  
இந்த போக்குவரத்து சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இன்றும் நாளையும்  வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என  தூத்துக்குடி மாவட்ட  கலெக்டர்  இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!