கலெக்டர் கார் மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி - ஈரோட்டில் பரபரப்பு!

 
ஈரோடு கலெக்டர் கார் விபத்து

ஈரோடு மாவட்டம் வெள்ளாளபாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியரின் கார் மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்துவிட்டு சண்முகம் (50) என்பவர் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வெள்ளாளபாளையம் பகுதியில் அவர் சாலையைக் கடந்தபோது, அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

ஆட்சியரின் கார் வருவதைக் கவனிக்காமல் சாலையைக் கடந்ததால் இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.