திருமணத்தை மறைத்துக் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த பேராசிரியர்!

 
மும்பை

 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே பல்லாரி டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் பி.யூ. கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த புகழ்பெற்ற கல்லூரியில் 42 வயதுடைய ரவிகிரண் என்பவர் தாவரவியல் பேராசியராகப் பணிபுரிந்து  வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2025 ம் ஆண்டு பல்லாரியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் இந்தத் தாவரவியல் படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

கல்லூரிப் படிப்பின் போது அந்த மாணவிக்கும் பேராசிரியர் ரவிகிரணுக்கும் இடையே ஒரு தற்காலிகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் படிப்பு மற்றும் சில குடும்ப விவகாரங்களில் ரவிகிரண் தொடக்கத்தில் உதவி செய்ததால், மாணவியும் அவரை நம்பி அவரிடம் மிகவும் நெருங்கிப் பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில் தனக்குத் திருமணமாகி குழந்தைகள் இருப்பதை முழுமையாக மறைத்து, அந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றித் தனியாகப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் பேராசிரியருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மை மாணவிக்குத் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி கல்லூரியில் வைத்துப் பேராசிரியரிடம் நேரடியாகத் தகராறில் ஈடுபட்டபோது, உல்லாசத்திற்காகவே அவளிடம் பழகியதாக ரவிகிரண் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி பல்லாரி டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள பேராசிரியரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.