கல்லூரி மாணவி பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை... கதறித் துடித்த தாய்!!

 
பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்த கல்லூரி மாணவி

 இந்தக் காலத்து இளைய தலைமுறையினர்  எது கேட்டாலும் கிடைத்துவிடவேண்டும் . ஏமாந்துவிட்டால் போராடி பெறுவோம் என்ற மனநிலையில் இல்லை. மன அழுத்தம் காரணமாக விபரீதமான முடிவுகளை எடுத்து விடுகின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையே இந்த விபரீத போக்கு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்த கல்லூரி மாணவி
ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில்  பெட்னி கிராமத்தில் வசித்து வருபவர்  அங்கத். இவர் சூரத்தில் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் அனிதா கவுட், தாயுடன்  வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும்  கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்தார்.  

தாய் விவசாயத்திற்கு சென்றுவிட்டார்.  தனியாக இருந்த அனிதா மோட்டாருக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு  தனக்கு தானே நெருப்பு வைத்துக் கொண்டார்.   அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக  அதற்குள் தீ அனிதாவின் உடல் முழுவதும் பரவியது.

ஆம்புலன்ஸ்


  இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  அனிதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து  போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வி காரணமாக அனிதா இந்த முடிவு எடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.  

From around the web