பைக் மீது லாரி மோதி கோர விபத்து - சம்பவ இடத்திலேயே துடிதுடித்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

 
விபத்து

சென்னை மஞ்சம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கனரக லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

சென்னை மஞ்சம்பாக்கம் அருகே ஜனா (20) என்ற கல்லூரி மாணவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அதிவேகக் கனரக லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜனா மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

விபத்து குறித்துத் தகவலறிந்ததும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த மாணவரின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைக் கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.