தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் பலி - உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்!

 
மின்சாரம் தோட்டத்தில்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 17 வயது கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வாலாஜாபாத் அருகேயுள்ள தோட்டப் பகுதிக்குச் சென்ற கல்லூரி மாணவர் வரபிரசாத் (17), தரையில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியைக் கவனிக்காமல் மிதித்துள்ளார். எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்ததில், அவர் துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி மானவி தற்கொலை

பராமரிப்புப் பணிகளைச் சரியாக மேற்கொள்ளாமல் மின் கம்பியை அறுந்து கிடக்கச் செய்த மின்சார வாரியத்தின் அலட்சியமே மாணவனின் மரணத்திற்கு முக்கியக் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

மாணவனின் மரணத்தால் ஆவேசமடைந்த உறவினர்களும் கிராம மக்களும் வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தைச் சுற்றி வளைத்து, தீவிர முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.