கிண்டி அரசு மருத்துவமனையில் கல்லூரி மாணவர் திடீர் உயிரிழப்பு - உறவினர்கள் ஆதங்கம்!

 
விபத்து கிண்டி

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் அரசு மின்சார பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்து கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை வேளச்சேரி டி.என்.எச்.பி. காலனியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் அய்யனாரப்பனின் 19 வயது மகன் தர்ஷன். இவர் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 16ம் தேதியன்று அய்யனாரப்பனும் அவரது மகன் தர்ஷனும் மோட்டார் சைக்கிளில் அசோக் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் வந்தபோது, கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு மின்சார பேருந்து இவர்கள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

விபத்தில் காயமடைந்த இருவரும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தந்தை அய்யனாரப்பன் குணமடைந்த நிலையில், தர்ஷனுக்கு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவிற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் வார்டில் இருந்த தர்ஷனுக்கு சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சிகிச்சை குறித்துப் பேசிய தர்ஷனின் உறவினர்கள், அறுவை சிகிச்சை நன்றாக முடிந்ததாகக் கூறிய மருத்துவர்கள், தற்போது நுரையீரல் தொற்று காரணமாகவே தர்ஷன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிப்பதாகக் கூறி கண்ணீருடன் வேதனை தெரிவித்தனர்.