கல்லூரி மாணவி விபத்தில் மரணம்... தகவல் அறிந்து தாயும் தூக்கிட்டு தற்கொலை!
Apr 18, 2024, 13:05 IST
கேரள மாநிலம் கொத்தமங்கலத்தில், சாலை விபத்தில் மகள் உயிரிழந்த செய்தி அறிந்து மனமுடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் ஆலுவா யுசி கல்லூரி எம்பிஏ படித்து வந்த மாணவி சினேகா (24) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிராயின்கீழில் நடந்த சாலை விபத்து ஒன்றில் பலத்த காயமடைந்தார். உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் சினேகா உயிரிழந்தார். மகள் சினேகா உயிரிழந்த தகவல் அறிந்ததும் சினேகாவின் தாயார் காயத்ரி நெல்லிக்குழியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த செய்தி கேட்டு தாயும் தற்கொலைச் செய்து கொண்டது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
