நடுரோட்டில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை - திருப்பூரில் பயங்கரம்!

 
திருப்பூர் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டத்தில் பட்டப்பகலில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்த ஸ்ரீஹரி என்ற கல்லூரி மாணவரை, மர்ம நபர் ஒருவர் திடீரென வழிமறித்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

எவ்வித அச்சமுமின்றி பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் ஸ்ரீஹரி படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? முன்விரோதம் அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் உண்டா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.