நெல்லையில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு... செல்போனில் பேசியபடி பெட்ரோல் நிரப்பியதால் தகராறு!

 
அரிவாள் வெட்டு

நெல்லை மாவட்டம் அம்பை அருகே பெட்ரோல் பங்கில் செல்போனில் பேசியபடி பெட்ரோல் நிரப்பியதால் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

கீழ ஏர்மாள்புரத்தைச் சேர்ந்த அருணாசலத்தின் மகன் துரைராம் (20), அம்பையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பகுதி நேரமாக பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த அவருக்கும், அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வேல்முருகன் (18) என்பவருக்கும் இடையே செல்போனில் பேசியபடி பெட்ரோல் நிரப்பியது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

சிறிது நேரத்தில் நண்பர்களுடன் மீண்டும் வந்த வேல்முருகன், துரைராமைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது சதீஷ் அரிவாளால் வெட்டியதாகவும், பெட்ரோல் பங்கில் இருந்த பூந்தொட்டி உள்ளிட்ட பொருட்களைச் சேதப்படுத்திவிட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தலையில் காயமடைந்த துரைராம் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.