கல்லூரி மாணவியிடம் ரயிலில் அத்துமீறல்!! போர்ட்டரை தட்டி தூக்கிய காவல்துறை!!

 
போலீஸ்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேர்வு எழுதுவதற்காக புறநகர் ரயில் ஒன்றில் 20 வயது கல்லூரி மாணவி சென்று கொண்டிருந்தார். அவர் காலை 6 மணிக்கு சி.எஸ்.எம்.டி ரயில் நிலையத்தில் இருந்து பேலாப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் ரயிலில் ஏறிய நேரத்தில் ரயிலில் பெண்கள் பெட்டியில் பாதுகாவலர் இல்லை. அவர் ரயிலில் ஏறிய பிறகு ரயில் புறப்படும் நேரத்தில் ஆடவர் ஒருவர் அதே பெட்டியில் ஏறினார். 

அந்த நேரத்தில் அந்தப் பெட்டியில் வேறு பெண்கள் யாரும் இல்லை. இதனால் அந்த நபர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். ரயில் மஜித் பந்தர் ரயில் நிலையம் வந்தபோது அவரிடம் இருந்து தப்பித்த மாணவி ரயிலை விட்டு கீழே இறங்கி ஆண்கள் பயணம் செய்யும் பொதுப்பெட்டியில் ஏறினார். மாணவி மிகவும் அதிர்ச்சியில் இருந்ததைப் பார்த்துவிட்டு அதே பெட்டியில் பயணம் செய்த மற்றொரு பயணி `ஏதாவது உதவி தேவையா?' என்று கேட்டார்.

Rape

மாணவி நடந்த சம்பவத்தைக் கூறினார். உடனே அந்த நபர் ரயில்வே போலீஸ் ஹெல்ப்லைன் நம்பரான 1512 போன் செய்து தகவல் கொடுத்தார். உடனே கட்டுப்பாட்டு அறையில் பேசியவர் பெண் காவலர்களை அனுப்பிவைத்தார். ரயில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. சான்பாடா ரயில் நிலையத்தில் பெண் போலீசார் மாணவியைச் சந்தித்தனர். அவர் தான் தேர்வு எழுதச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். உடனே அந்த மாணவியுடன் ரயில்வே போலீசார் தேர்வு எழுத வேண்டிய இடத்துக்குச் சென்றனர். 

தேர்வு அதிகாரியிடம் மாணவி நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். உடனே மாணவிக்கு வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து அந்த மாணவியை சி.எஸ்.டி.எம் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று முறைப்படி புகார் செய்ய வைத்தனர். மாணவி அதிர்ச்சியில் இருந்ததால் என்ன மாதிரி குற்றம் நடந்தது என்பதை தெரிவிக்க மறுத்தார். பெண் போலீசார் கவுன்சலிங் கொடுத்த பிறகு அவர் நடந்த உண்மையைத் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்பே ரயில்வே போலீசார் குற்றவாளியைத் தேட ஆரம்பித்தனர். குற்றவாளியின் புகைப்படம் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் தீவிரமாகத் தேடினர். 

arrest

ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் இணைந்து மூன்று தனிப்படைகளை அமைத்து தேடியபோது குற்றவாளி மஜித் பந்தர் ரயில் நிலையத்தில் நின்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. உடனே அவனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் நவாஸ் கரீம் (40) என்று தெரியவந்தது. பீகாரைச் சேர்ந்த அவர் ரயில்வேயில் போர்ட்டராக வேலை செய்வது தெரியவந்தது. குற்றம் நடந்து 8 மணி நேரத்தில் குற்றவாளி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து புறநகர் ரயிலில் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் லக்னோவிலிருந்து மும்பை வந்த ரயிலில் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அதுவும் மும்பை அருகில் இந்தச் சம்பவம் நடந்தது.

From around the web