ஓடும் பேருந்தில் இருந்து கீழ் இறங்க முயன்ற கல்லூரி மாணவர்.. அடுத்து நடந்த விபரீதம்!

 
அபிஷேக்

புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் இருந்து  இறங்க முயன்ற கல்லூரி மாணவர் கால் இடறி கீழே விழுந்ததில் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி தமிழ்தாய் நகரை சேர்ந்தவர் அபிஷேக். அவரது தந்தை ஒரு தொழிலாளி மற்றும் அவரது ஒரே மகன் அபிஷேக். தாகூர் அரசு பள்ளியில் பொருளாதாரம் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரி முடிந்து தனியார் பேருந்தில் செல்ல பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளார். பழைய பேருந்து நிலையத்திற்கு சற்று முன் பெரிய கட சந்து என்ற பகுதியில் பேருந்து நின்றது. ஆனால், பேருந்தில் இருந்து கீழே இறங்காமல், அங்கிருந்து பேருந்து புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் செல்லும் போது, ஓடும் பேருந்தில் இருந்து இறங்கியபோது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில், பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி அபிஷேக் உயிரிழந்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web