குறைந்த மாணவர் சேர்க்கை... அரசு கலைக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பில் 14,115 காலி இடங்கள் !
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கான மொத்த இடங்களில் 42.32 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான இடங்கள் இன்னும் காலியாக இருப்பது உயர் கல்வித் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதுநிலை மாணவர் சேர்க்கை நிலவரம்:
-
தமிழக உயர் கல்வித் துறையின் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் மொத்தம் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
-
இக்கல்லூரிகளில் 2026-27-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு மொத்தம் 24,470 இடங்கள் உள்ளன.
-
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், 7,442 மாணவர்களும், 2,901 மாணவிகளும், 12 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 10,355 பேர் சேர்ந்துள்ளனர்.
-
மொத்தமுள்ள இடங்களில் 42.32% மட்டுமே நிரம்பியுள்ள நிலையில், இன்னும் 14,115 இடங்கள் மாணவர் சேர்க்கைக்காகக் காலியாக உள்ளன.
அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான பெரும்பாலான இடங்கள் காலியாக இருப்பது கல்வி வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
