கொலம்பியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து: 14 தொழிலாளர்கள் பலி

 
சுரங்கம்

 

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் நாரினோ மாகாணத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்த 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

14 Killed In Landslide At Illegal Gold Mine In Colombia

கொலம்பியாவில் முறையான பாதுகாப்பு வசதிகள் இன்றி செயல்படும் சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத சுரங்கங்களில் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது. சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ள சவால்களை இந்தச் சம்பவம் மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.