’வேலைக்கு இருக்கு வா’.. பணியிடத்திற்கு சென்ற பெண்ணை தாக்கி பலாத்காரம்.. அதிமுக நிர்வாகியின் மகன் வெறிச்செயல்!

நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் முகமது மீரான். இவர் நெல்லை அதிமுக சிறுபான்மை பிரிவு நிர்வாகி, தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த வகையில், தாழையூத்து, நெல்லை டவுன், பாறையடி பகுதிகளில் பாட்டில் தண்ணீர் விநியோகம் செய்கிறார். அவருக்கு முகமது சர்ஜின் என்ற 30 வயது மகன் உள்ளார். தண்ணீர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகப் பணிகளை அவர் கவனித்துக் கொள்கிறார், மேலும் 3 இடங்களில் உள்ள நிறுவனங்களுக்கு அடிக்கடி சென்று வருகிறார். அந்த வகையில், 35 வயது திருமணமான பெண் ஒருவர் நெல்லை டவுன், பாறையடியில் உள்ள தண்ணீர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில், சர்ஜினுக்கு அந்தப் பெண் மீது ஆசை இருந்ததால், தவறான காரணங்களுக்காக அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், முகமது மீரானிடம் இது குறித்து கூறினார். இதையடுத்து, மீரான் தனது மகன் சர்ஜினையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சர்ஜின், அந்தப் பெண்ணுக்கு பாறையடியில் உள்ள நிறுவனத்தில் வேலை இருப்பதாகத் தனியாக போன் செய்து, அங்கு வந்த பெண்ணை கடுமையாகத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார்.
படுகாயமடைந்த அந்தப் பெண், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அழுது கொண்டே, சர்ஜின் தன்னை சிகரெட்டால் சுட்டு சித்திரவதை செய்ததாகக் கூறினார். இதையடுத்து, நெல்லை டவுன் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அதிமுக பிரமுகரின் மகன் முகமது சர்ஜினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!