வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு… ஹோட்டல், டீக்கடைகளுக்கு கூடுதல் செலவு! ?

 
சிலிண்டர்

 

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நவம்பர் மாதத்தில் மேலும் ரூ.11 உயர்ந்துள்ளது. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் சமையல் செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர்

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி நிர்ணயிக்கின்றன.

அதன்படி, சென்னையில் கடந்த மாதம் ரூ.3,005.50-க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ வணிக சிலிண்டர், தற்போது ரூ.3,016.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திலும் வணிக சிலிண்டர் விலை ரூ.66.50 அதிகரிக்கப்பட்டிருந்தது.

சிலிண்டர்

அதேநேரத்தில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் தொடர்ந்து ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வணிக சிலிண்டர் விலை உயர்வு ஹோட்டல், டீக்கடை, பேக்கரி மற்றும் உணவகங்களின் செயல்பாட்டுச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.