காமன்வெல்த்: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை சீமா கலிராம்னா வெண்கலம் வென்றார்!

 
வட்டு எறிதல்இந்திய வீராங்கனை சீமா கலிராம்னா

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் சீமா கலிராம்னா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா கலிராம்னா 58.65 மீட்டர் தூரம் வட்டை எறிந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஜமைக்காவின் சமந்தா ஹால் (61.66 மீட்டர்) தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.. கனடாவின் ஜூலியா டங்க்ஸ் (60.67 மீட்டர்) தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்போட்டித் தொடரில் இந்தியா தங்கப் பதக்கம்: 3, வெள்ளிப் பதக்கம்: 10, வெண்கலப் பதக்கம்: 4 என இதுவரை மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது: இதன் மூலம் காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது 10-ஆவது இடத்தில் உள்ளது.