பல்லாவரத்தில் பரபரப்பு: தகாத உறவில் வீட்டைவிட்டு வெளியேறிய ஜோடி மீது கும்பல் சரமாரி தாக்குதல்!

 
சென்னை

 

தகாத உறவு விவகாரத்தில் பூந்தமல்லியைச் சேர்ந்த டேவிட் மற்றும் பல்லாவரத்தைச் சேர்ந்த பவானி ஆகியோர் கடந்த தீபாவளியன்று வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இது குறித்து பவானியின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

புகாரின் பேரில் தீவிரமாகத் தேடி வந்த போலீசார், இருவரும் கர்நாடக மாநிலத்தில் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து இருவரையும் மீட்டு விசாரணைக்காகப் பல்லாவரத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

அப்போது அங்கு திரண்டு வந்த கும்பல் ஒன்று, டேவிட்டைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் டேவிட் மற்றும் பவானி ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டுத் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துப் பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்