பலருடன் தொடர்பு.. வாக்குவாதத்தில் பெண்ணை கொன்று நாடகமாடிய கள்ளக்காதலன் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வியாழக்கிழமை ஒரு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வந்த போலீசார், இன்று சம்பவம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் வெளியான தகவலின்படி, மதுராந்தகம் சுக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (28). கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் சங்கீதா (32). இருவரும் ஏற்கனவே திருமணமானவர்கள். இந்த நிலையில், இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவரும் நேற்று வியாழக்கிழமை மாமல்லபுரத்திற்குச் சென்றிருந்தனர். அங்குள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அப்போது, சங்கீதா கழிப்பறைக்குச் சென்றபோது, ஜெயராஜ் தனது செல்போனை எடுத்துப் பார்த்தார்.
சங்கீதா பலருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ், சங்கீதாவுடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஜெயராஜ் சங்கீதாவை கழுத்தை நெரித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. மூச்சுத் திணறல் காரணமாக சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அறிந்த ஜெயராஜ், குற்றச் சம்பவத்தை அரங்கேற்றி, சங்கீதா தற்கொலை செய்து கொண்டது போல் நாடகம் ஆடினார். ஆனால், பிரேத பரிசோதனையில் சங்கீதா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் போலீசார் ஜெயராஜை கைது செய்து விசாரித்ததில், அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், போலீஸ் விசாரணையில், ஏற்கனவே திருமணமான சங்கீதாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், ஜெயராஜுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரியவந்தது. திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட பெண்ணை கொன்று, பின்னர் தற்கொலைக்கு முயற்சித்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!