இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்!

 
கம்யூனிஸ்ட்

தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களின் மதியம் 3 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

தாராபுரம் தொகுதி நிலவரம் (மதியம் 3 மணி): தவெக (சத்யபாமா): 60,078 வாக்குகள் பெற்று முதலிடத்தில் தொடர்கிறார். திமுக (சுகன்யா): 50,075 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அதிமுக (பானுமதி): 38,760 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி 4,787 வாக்குகளையும், தவெக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெறும் 1,065 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார்.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

மதுராந்தகம் தொகுதி நிலவரம் (மதியம் 3 மணி): தவெக (மரகதம் குமரவேல்): 58,133 வாக்குகள் பெற்று வலுவான முன்னிலை வகிக்கிறார். திமுக (பரந்தாமன்): 41,531 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அதிமுக (கணிதா சம்பத்): 35,951 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நாம் தமிழர் கட்சி 1,603 வாக்குகளையும், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 1,376 வாக்குகளையும் பெற்று இத்தொகுதியிலும் டெபாசிட்டை இழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இடதுசாரி (கம்யூனிஸ்ட்) கட்சிகள் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே தேவையான குறைந்தபட்ச வாக்குகளைப் பெறாமல் டெபாசிட்டை இழந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க விவாதமாக மாறியுள்ளது.