விவசாயிகளுக்கு ரூ40000 இழப்பீடு!! என்.எல்.சி. அதிரடி அறிவிப்பு!!

 
என்.எல்.சி

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்களில் கால்வாய் தோண்டும் பணிகள் ஜூலையில் தொடங்கப்பட்ட போது   நிலங்களில் விவசாயிகள் பயிர்கள் செய்திருந்தனர். இதனால் என்எல்சியின்  பணிகளுக்கு விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் விவசாயி முருகன் என்பவர் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.  

என்.எல்.சி

உயர் நீதிமன்றம் தற்போது பணிகள் நடைபெறுவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ40000   இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடை செய்த பிறகு விவசாயிகள் நிலத்தை என்எல்சியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது  என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் ஏக்கருக்கு ரூ25லட்சம் வழங்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே இந்த மதிப்பீடு  ,  அதற்கு முன்பாக நிலத்தை கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம்

இது குறித்து என்எல்சி ”  பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் 88 பேருக்கு தலா ரூ40000 இழப்பீடு  வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். புதிய பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றம்  இந்த உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என அறிவித்துள்ளது.  தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி குறித்த விஷயங்களில்  அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web