நில மோசடியில் ஈடுபட்ட பாஜக பெண் பிரமுகர்.. பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த வீரலட்சுமி!

 
வீரலட்சுமி

சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை நில மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி புகார் தெரிவித்துள்ளார். சென்னை - பெங்களூரு இடையே விரைவுச் சாலை அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

600 கோடி சொத்து; சிக்கிய பாஜக பெண் நிர்வாகி - அம்பலப்படுத்தும் 'தமிழர்  முன்னேற்றப் படை' வீரலட்சுமி | nakkheeran

இந்நிலையில், பாஜக பிரமுகர் மாலினி ஜெயச்சந்திரன், போலி ஆவணம் தயாரித்து நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில், தமிழர் முன்னேற்ற அமைப்பின் தலைவர் பண்டா வீரலட்சுமி புகார் அளித்தார்.

சென்னை பெங்களூரு விரைவுச் சாலைக்காக கந்தூர் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் என்பவருக்குச் சொந்தமான 1.75 ஏக்கர் நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து பாஜகவைச் சேர்ந்த மாலினி ஜெயச்சந்திரன் ரூ.2 கோடி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதுகுறித்து, பேசிய வீரலட்சுமி மோசடி ஆவணங்களை, மாவட்ட குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்துள்ளோம்.

land acquisition scam which caused about 200 crore loss to the National  Highways Authority of india in Kancheepuram district | காஞ்சிபுரம் : 200  கோடி முறைகேடு விவகாரத்தில் வருவாய்த்துறை சார்பில் 6 ...

மேலும், இந்த அதிவேக நெடுஞ்சாலை நில ஆக்கிரமிப்பில் இதுபோன்ற பல கோடி ரூபாய் மோசடிகள் நடந்துள்ளதால், உரியவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. எனவே இதை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முறையாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.  இது குறித்து நரசிம்மன் மாவட்ட குற்றப்பிரிவில் ஆஜராகி தனது தரப்பு ஆவணங்களையும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web