காலை உணவுத் திட்ட நிதியில் சர்ச்சை - நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகப் புகார்!
பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.217 கோடி நிதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதியிலிருந்து தொகைப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் மற்றும் சமூக அரங்கில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
பள்ளி மாணவர்களின் பசிப்பிணியைப் போக்கச் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட ரூ.217 கோடி மதிப்பீட்டு நிதியில் பின்வரும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆதிதிராவிட சமூகத்தின் மேம்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட சிறப்புச் செயல்திட்ட நிதியிலிருந்து ரூ.63.15 கோடி எடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிதியிலிருந்து ரூ.6.11 கோடி இத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்தப் பொருளாதார மேம்பாட்டிற்கும், கல்வி வளர்ச்சிக்கும் ஒதுக்கப்படும் பிரத்யேக நிதியை, பொதுவான அமைப்பில் செயல்படுத்தப்படும் ஒரு சமூக நலத் திட்டத்திற்குத் திருப்பி விடுவது முறையல்ல எனப் பல்வேறு சமூக ஆர்வலர்களும், அமைப்புகளும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்
