லஞ்சம் கொடுத்ததாக புகார்... அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

 
மரிய வில்சன்

திமுக ஆட்சியின்போது பள்ளிகளுக்கு அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதற்குத் தாமே நேரடி சாட்சி எனச் சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சிவசுப்பிரமணியம் இந்தப் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் மரிய வில்சன் நிதியமைச்சர்

முன்னதாகச் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிகளுக்குத் தடையின்மைச் சான்று மற்றும் அனுமதி பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், அதற்குத் தாமே நேரடி சாட்சி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும். எனவே, அமைச்சர் மரிய வில்சனின் இந்த வெளிப்படையான வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு  உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்தப் பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.