தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்புப் புகார்!

 
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

திமுக தலைமை மீது பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த தவெக மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது, அவரது சொந்த ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர் நில அபகரிப்புப் புகார் அளித்துள்ள விவாரம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவர் மீதும், அவரது சொந்த ஊரைச் சேர்ந்த உக்ரபாண்டியன் என்பவர் இந்த நில அபகரிப்புப் புகாரைக் கொடுத்துள்ளார்.

eர்

சொந்த ஊரைச் சேர்ந்த உக்ரபாண்டியன் அளித்துள்ள புகாரில்,  அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தவெக-வில் இணைவதற்கு முன்பாக, பாஜக மற்றும் அ திமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பில் இருந்த காலம் அது. அந்த காலகட்டத்தில் அவர் தனது சொந்த ஊரில் பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டு, பலருக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துத் தன்வசப்படுத்திக் கொண்டதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க திமுக தரப்பில் ரூ. 50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் கடந்த சில தினங்களாகத் தமிழக அரசியலில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.