முதல்வர் வசமுள்ள பேரூராட்சி இயக்குநரகத் துறையில் டெண்டர் முறைகேடு புகார்கள்!
Aug 30, 2026, 17:50 IST
தமிழக அரசில் தொடர்ச்சியாக டெண்டர் விதிமீறல்கள் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தற்போது முதல்வர் வசம் உள்ள பேரூராட்சி இயக்குநரகத் துறையில் மிகக் குறுகிய கால அவகாசத்தில் புதிய டெண்டர்கள் வெளியிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பேரூராட்சி இயக்குநரகத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வாரச்சந்தை தொடர்பான டெண்டரைச் சமர்ப்பிக்க வெறும் 4 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், சமூக நலக்கூடம் தொடர்பான டெண்டருக்கும் வெறும் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சாதகமாகச் செயல்படும் நோக்கில் இதுபோன்று மிகக் குறுகிய கால அவகாசத்தில் டெண்டர்கள் அறிவிக்கப்படுவதாகப் புகார்கள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
