3-வது நாளாகக் குவியும் புகார்கள்... கதறும் மக்கள்.. மதுரையில் ரூ.1000 கோடி ஆன்லைன் மோசடி!
Aug 30, 2026, 18:30 IST
மதுரை மேலூர் பகுதியில் போலி ஆன்லைன் செயலி மூலம் பணம் இரட்டிப்பு செய்வதாகக் கூறி நடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான புகார்களைப் பெறும் முகாம் தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வருகிறது.

பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்புப் புகார்ப் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்தச் சிறப்பு முகாம்களில் நேற்று ஒரே நாளில் பெண்கள் உட்பட 25,000-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து தங்களது புகார்களைப் பதிவு செய்தனர். மோசடியின் வீச்சு அதிகமாக இருப்பதால், இன்றும் மூன்றாவது நாளாக நூற்றுக்கணக்கான மக்கள் காவல் நிலையங்களிலும் முகாம்களிலும் திரண்டு தங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக்களை அளித்து வருகின்றனர்.
