100 ஆண்டுகள் நிறைவு... இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி, பொதுக்கூட்டம்!

 
ஆர்.எஸ்.எஸ். ஆர்எஸ்எஸ் பேரணி

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்துவது ராஷ்ட்ரிய சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) வழக்கமாகும். அந்த வகையில், தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிகள் நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு அந்த அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்து 101-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டு, சட்டப் போராட்டத்திற்குப் பின் உயர் நீதிமன்ற அனுமதியுடன் இன்று பேரணிகள் நடைபெறுகின்றன.உயர் நீதிமன்ற உத்தரவும் அனுமதியும்:

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்குக் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். மாநிலச் செயலாளர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, காவல்துறை உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.   சென்னையில் 7 இடங்களில் அணிவகுப்பு:

ஆர்எஸ்எஸ்

நீதிமன்ற அனுமதியின்படி, தலைநகர் சென்னையில் திருவொற்றியூர், கொளத்தூர், எழும்பூர், கொரட்டூர், அய்யப்பன்தாங்கல், மேடவாக்கம் மற்றும் குரோம்பேட்டை ஆகிய 7 முக்கிய இடங்களில் இன்று சீருடை அணிந்த தொண்டர்களின் பேரணி நடைபெறுகிறது.எழும்பூர் பேரணி: எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகிலிருந்து இன்று மாலை 4:00 மணிக்குத் தொடங்கும் அணிவகுப்பு ஊர்வலம், ராஜரத்தினம் மைதானம் அருகே சென்றடைகிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்திய சமூகத்தை ஒன்றிணைத்துள்ளது... ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்  !

அதைத் தொடர்ந்து அங்குப் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.கொளத்தூர் பேரணி: கொளத்தூர் பகுதியைப் பொறுத்தவரை, பெரவள்ளூர் காமராஜர் சிலை அருகே மாலை 3 மணிக்கு அணிவகுப்பு தொடங்கும் என ஆர்.எஸ்.எஸ். நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் 7 இடங்களில் பேரணி நடைபெறுவதைத் தொடர்ந்து, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.