நெல்லையில் அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - நடத்துனர் உயிரிழப்பு; 20 பேர் படுகாயம்!

 
பேருந்து விபத்து

திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரி அருகே அரசுப் பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. இப்பேருந்து சேரன்மகாதேவி அருகே உள்ள பிராஞ்சேரி பகுதிக்கு வந்தபோது விபத்து நிகழ்ந்தது.

எதிரே வந்த டிப்பர் லாரியும் அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த மோதலின் தீவிரத்தால் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் அப்பளம்போல் நொறுங்கியது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

இக்கோர விபத்தில் பேருந்தின் நடத்துனர் அஜித் மெல்வின் என்பவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஓட்டுநர்கள் உள்பட பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டுச் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.