காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு! 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்

 
காங்கோ

 

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் பண்டிபக்யோ வகை எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.

காங்கோ எபோலா பாதிப்பு எண்ணிக்கை, Ebola case count in Congo

கடந்த மே மாத மத்தியில் தொடங்கியதாகக் கூறப்படும் இந்தத் தொற்று, காங்கோவின் 26 மாகாணங்களில் 8 பகுதிகளுக்குப் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, நைஜீரியாவிலிருந்து பயணம் செய்த பெண் ஒருவருக்கு கடந்த 7-ம் தேதி நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும், 17-ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காங்கோவைத் தொடர்ந்து கென்யா, உகாண்டா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் குறித்த கவலை எழுந்துள்ளது. இதனால் ஆப்பிரிக்க நாடுகளில் சுகாதாரக் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Congo's Ebola outbreak reaches 5,000 cases : NPR

எபோலா தொற்று காய்ச்சல், உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்களுடன் நேரடித் தொடர்பு மூலம் வைரஸ் பரவக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகின்றன.