குவியும் வாழ்த்துக்கள்.. நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ‘ஸ்பைடர் மேன்’ பட நடிகர்!

 
ஸ்பைடர் மேன் ஜேக்கப்

ஹாலிவுட்டின் முன்னணித் திரைப்படமான ‘ஸ்பைடர் மேன்’ மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் ஜேகப் பேட்டலான், தனது நீண்ட நாள் காதலியான வெரோனிக்கா லீஹோவைக் கரம்பிடித்துள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ஸ்பைடர் மேன்’ திரைப்படங்களில் பீட்டர் பார்க்கரின் நெருங்கிய நண்பனான ‘நெடு’ கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜேகப் பேட்டலான். சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே’ படத்திலும் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. படப் விளம்பரப் பேட்டி ஒன்றில் ஜேகப், "என் மனைவி என்னை பெரிய நாய்க்குட்டி என்று செல்லமாகக் கூப்பிடுவார்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். 29 வயதான ஜேகப்பிற்கு இன்னும் திருமணமாகவில்லை என்று நினைத்த ரசிகர்கள், இந்த பேட்டியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் இணையத்தில் தீவிரமாக ஆராய்ந்ததில், ஜேகப் மற்றும் வெரோனிக்காவிற்குச் சில மாதங்களுக்கு முன்பே பிரான்சில் ரகசியமாகத் திருமணம் முடிந்தது தெரியவந்தது.

மால்டோவா நாட்டைச் சேர்ந்த வெரோனிக்கா, அமெரிக்காவில் குடியேறி தற்போது இன்டீரியர் டிசைனராகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். கடந்த 2025-ம் ஆண்டில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது பிரான்சில் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாகத் திருமணம் முடிந்துள்ளது.

இதேபோல 'ஸ்பைடர் மேன்' படத்தில் முதன்மை ஜோடியாக நடித்த டாம் ஹாலண்ட் - ஜெண்டாயா ஜோடியும் நீண்ட நாட்களாகக் காதலித்து வரும் நிலையில், அவர்களுக்கும் ரகசியமாகத் திருமணம் முடிந்துவிட்டதாகச் செய்திகள் உலா வருகின்றன. ஆனால், இதுகுறித்து அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.