10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டைச் சகோதரிகள் - குவியும் வாழ்த்துகள்!

 
ட்வின்ஸ் இரட்டைச் சகோதரிகள் ட்வின்ஸ் இரட்டைச் சகோதரிகள்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் இருவரும் ஒரே அளவாக 420 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பொய்யபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் - கலையரசி தம்பதியர். இவர்களுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குச் செந்தமிழ்காவியா, பைந்தமிழ் ஓவியா எனத் தமிழ் மீது கொண்ட பற்றால் பெற்றோர் பெயர் சூட்டினர்.

சிறு வயது முதலே ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்த இந்த இரட்டைச் சகோதரிகள், தற்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்விலும் இரட்டையர்களைப் போலவே ஒரே அளவாக 420 மொத்த மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

இருவரின் மொத்த மதிப்பெண்களும் 420 ஆக சமமாக இருந்தாலும், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்களில் சிறு மாற்றங்கள் உள்ளன. இருவரின் மொத்த மதிப்பெண்களும் 420 ஆக சமமாக இருந்தாலும், பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்களில் சிறு மாற்றங்கள் உள்ளன

பாடங்கள் செந்தமிழ்காவியா பைந்தமிழ் ஓவியா
தமிழ் 94 83
ஆங்கிலம் 77 73
கணிதம் 75 88
அறிவியல் 82 85
சமூக அறிவியல் 92 91
மொத்த மதிப்பெண் 420 420

செந்தமிழ்காவியா தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில், பைந்தமிழ் ஓவியா கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தனது சகோதரியை விடக் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

இருப்பினும், இறுதிப் பட்டியலில் இருவரின் கூட்டல் தொகையும் 420 என துல்லியமாக ஒன்றாக வந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்துச் சாதனை படைத்த இந்த இரட்டைச் சகோதரிகளுக்குப் பொய்யபட்டி கிராம மக்களும், சமூக வலைதளவாசிகளும் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.