விசிக வேட்பாளராக காங்கிரஸ் நிர்வாகி... திருமாவுக்கு வந்த சோதனை... கடைசியில இப்படி ஆகிட்டாரே?!

 
ஜோதிமணி ஜோதிமணி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி, தான் இன்னும் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பதாகத் தெரிவித்துள்ள கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

திமுக கூட்டணியில் காட்டுமன்னார்கோவில் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணியின் பெயர் இடம்பெற்றிருந்தது.

அதிமுக - பாஜக ஆட்சியை கைப்பற்றும் எனக் கூறுவது  ஒரு வகையான பில்டப் மட்டுமே...  திருமா விளாசல்!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, "நான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவே விருப்பமனு அளித்திருந்தேன். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் வரவில்லை. தற்போது விசிக தலைவர் திருமாவளவன் என்னை அந்தத் தொகுதியின் வேட்பாளராக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் என்னை எப்படி விசிக வேட்பாளராக அறிவித்தார்கள் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை."

"திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் விசிக தலைவர்கள் பேசி எடுத்த முடிவாக இது இருக்கலாம். காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடச் சொல்கிறார்களா அல்லது விசிக சின்னத்திலா என்பது குறித்து எனக்கு இதுவரை முறையான தகவல் வரவில்லை. இரு கட்சித் தலைவர்களும் இணைந்து எடுக்கும் முடிவின்படி நான் செயல்படுவேன்."

திருமாவளவன்

கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டின் போது ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில், மற்றொரு தோழமைக் கட்சியின் நிர்வாகியைப் போட்டியிட வைப்பது 'நட்பு ரீதியான' ஒரு உத்தியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், வேட்பாளருக்கே இது குறித்த தெளிவான தகவல் இல்லாதது அத்தொகுதி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.