காங்கிரஸ் கூட்டத்தில் தள்ளு முள்ளு.. பெண் செய்தியாளரை தாக்கிய கொடூரம்.. வீடியோ வைரல்!

 
பெண் பத்திரிக்கையாளர்

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பெண் பத்திரிகையாளர் தாக்கப்படும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தலில் கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் வேட்பாளராக களமிறங்கினார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


ஏராளமான தொண்டர்களுடன் பிரமாண்ட பேரணியில் டி.கே.சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக, 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், கேமராமேன்கள் மேடை அருகே காத்திருந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு செய்தி சேகரிக்க நின்று கொண்டிருந்த பிடிஐ பெண் செய்தியாளரிடம் நிருபர் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கன்னத்தில் அறைந்து தாக்கினார்.

இதைப் பார்த்ததும் அருகில் இருந்த சக பத்திரிகையாளர்களும், திரண்டிருந்த காங்கிரசார்களும் இருவரையும் தடுத்து நிறுத்தினர். பெண் பத்திரிக்கையாளரை தாக்கிய சக பத்திரிக்கையாளருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என, ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web