காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

வயநாட்டில் 2024 டிசம்பர் 27 முதல் வனவிலங்குகளால் 7 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த கவலைக்குரிய பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அதற்காக மத்திய அரசும் மாநில அரசும் வயநாடு தொகுதிக்கு நிதி அனுப்ப வேண்டும். இந்தப் பிரச்னையை மக்களவையில் இன்று எழுப்புவேன் என நம்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் கடலோரம் மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
