சட்டமன்ற இடைத்தேர்தல்...காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு
மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிப்பு
அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து காலியான இடத்திற்கு ஜூன் 18 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 107 உறுப்பினர்களுடன் தவெக தனி பெரும் கட்சியாக விளங்கி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனக் கருதப்பட்டது. வேறு எந்தக் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால் தவெக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்ற நிலையும் இருந்தது.

மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யாராவது அறிவிக்கப்படுவார் என்று அரசியல் வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே கூட்டணி உடன்பாட்டின்படி அந்தப் பதவி காங்கிரசுக்கு வழங்கப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் கூட்டணி கட்சிகள் தங்களின் தேர்தல் பணிகளைத் தொடங்கின.

இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான இறுதி ஒப்புதலை காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கூட்டணி கட்சித் தொண்டர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் தங்களின் தேர்தல் ஆதரவு பணிகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர்.
